இது ஒரு இத்தாலியன் Dessert இங்கு இருக்கும் ஆலீவ்கார்டனில்(Olive Garden) மிகனும் பிரபலமான ஒரு ஸ்வீட் இது..கொஞ்சம் சீஸ் கேக் போலவும் இருக்கும் ...இதை நிறைய தேடல்களுக்கு பிறகு செய்து..அனைவரின் பாராட்டையும் பெற்ற ரெசிபி தான் இது..
தேவையான பொருட்கள்:-
லேடி பிங்கர்
(இது ஒரு வகை பிஸ்கேட்)
விப் கிரீம் - 1 ,1/2 கப்
கிரீம் சீஸ் -1 பாக்கெட் (8z)
சக்கரை- 6 Tbs
முட்டை மஞ்சல் கரு - 3
கோக்கோ பவுடர் - 1 Tbs
காபி - 1கப் (சக்கரை பால் கலக்காதது)
செய்முறை:-
*. முட்டை கருவுடன் 3 ஸ்பூன் சக்கரை சேர்க்கவும்.
*.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அது காய்ந்ததும் அதற்க்கும் மேல் இந்த முட்டை கரு இருக்கும் பாத்திரத்தை வைத்து நன்கு கலக்கவும்(டபுல் பாய்லர்).... மஞ்சள் கலர் மாறி..இலம் மஞ்சள் நிறம் வந்தால் முட்டை வெந்து இருக்கும்...
*ஒரு பவுலில் கிரீம் சீஸ், 3 ஸ்பூன் சக்கரை போட்டு நங்கு மிருதுவாகும் வரை கலக்கவும்.
*.சீஸ் கலவையுடன் முட்டையையும் சேர்த்து கலக்கவும்.
*.அதில் விப் கிரீம், 2 ஸ்பூன் காபி சேர்க்கவும்.
*.எல்லாம் ஒன்ருசேர கலக்கவும்.
*.தேவையானவைகளை தயாராக வைக்கவும்.
*.காபி கலவையில் லேடி பிங்கரை இரண்டு பக்கமும் நினைக்கவும்..(விரைவாக எடுத்து விடவும் இல்லை என்றால் உடைந்துவிடும்)
அப்பாடா இந்த ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்க தான் அவர் வந்தார் .நன்றி :-)
*.இதை பாத்திரதில் இடைவெளி விடாமல் அடுக்கவும்.
*.அதற்க்கும் மேல் சீஸ் கலவையை போடவும்
*.சமமாக பரப்பிவிடவும்.
*. அதன் மேல் கோக்கோ பவுடர் சல்லடையில் போட்டு தூவிவிடவும்.
*.திரும்பவும் ஒரு லேடிபிங்கர் லேயர் காபியில் டிப் செய்து அடுக்கவும்.
*அதன் மேல் சீஸ் கலவையை நிறப்பவும்.
*.மேலே கொக்கோ பவுடர் தூவி 8 மணி நேரம் பிரிஜ்ஜில் குளிர வைக்கவும்.
கட் செய்து மேலே கொஞ்சம் சக்கரை தூவி சாப்பிட்டால் ...கண்டிப்பாக எல்லாரும் திரும்ப திரும்ப கேட்பார்கள்.
...................................................
Comments
உங்க தொடரை விரைவில் தொடர முயற்ச்சிக்குரேன். :-)
உங்களை நான் பிடித்த பத்து பென்கள் தொடர்ப் பதிவுக்கு அழைத்த்ருக்கேன். வந்து கலந்துகோங்க.
Thanks,
Priya