காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2
முதலில் காலிஃப்ளவர் மஞ்சூரியன் டயட் முறை இருந்த்தாலும் இதற்க்கு ஈடு எதுவும் இல்லை..
தேவையான பொருட்கள்:-
காலிஃப்ளவர் - 1
மைதாமாவு - 1 tsp
கரம்மசாலா - 1/2 tsp
எண்ணெய் - 2 tsp
அரிசிமாவு - 4 tsp
கடலை மாவு - 2 tsp
மிளகாய்த்தூள் - 1/4 tsp
இஞ்சி, பூண்டு விழுது - 1 tsp
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்- 1
குடமிளகாய்- 1
வெங்காயதாள்- 5
சோயாசாஸ்,
டொமெட்டோ சாஸ்
செய்முறை:-
#.முதலில் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு 5 நிமிடம் வேகவிட்டு தண்ணிர் வடித்து வைக்கவும்.
#. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,கல்ர் பவுடர்,கடலைமாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
#.காலிஃப்ளவரை மாவில் பிரட்டி பொரிக்காமல் ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
#.அப்பிடியே சாப்பிடலாம்.
#.பின் தவாவில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
#.கொஞ்சம் வெங்காயம் கலர் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்,பின் குடமிளகாய்,வெங்காயத்தாள் சேர்த்து வதங்கியதும்
# , சோயாசாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்.
#.பின் அதில் பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டவும்.
#.சுவையான காலிஃப்ளவரை மஞ்சூரியன் தயார்.
....................................................
Comments
நன்றி ஜலீலா அக்கா,
நன்றி மேனகா, நல்லா இருக்கேன்பா...இப்பதான் கொஞ்சம் பிளாக் பக்கம் வரமுடிஞ்சது :-)
நான்வெஜ் கொஞ்சம் இருக்கு அடுத்த குறிப்பு உங்களுக்காக நான்வெஜ் கண்டிப்பாக இருக்கும்.
அப்புறம் கை மாடலுக்காக இல்லைங்க காலிபிளவரை அப்படிதான் டிப் செய்யன்னும் அதுக்குதான் :-)
நன்றி Chef.Palani Murugan, LiBa's Restaurant
நன்றி ஸாதிகா அக்கா.
Hi Viji...Thanks :-).