ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கேன் ...இன்னைக்கு வினாயகச்சதுர்த்திக்கு எல்லாரும் செய்யும் விநாயருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கட்டை............. எங்க வீட்டு கொழுக்கட்டை சாப்பிடா வாங்க.
தேவையானப்பொருட்கள்:
வருத்த அரிசிமாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1/2கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
ஏலக்காய் - 4 பொடி செய்தது
எண்ணைய் - 2 முதல் 3 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பூரணம்:
#.வெல்லத்தை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வடிகட்டு அதை கொதிக்க விடவும்.
#.அதில் துருவிய தேங்காய் , ஏலக்காய் தூள் போட்டு வதக்கவும்.
#.பூரணம் சுண்ட வந்ததும் இறக்கி ஆரவிடவும்.
மேல் மாவு:-
#.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் உப்பு போட்டு பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கரண்டியால் கட்டி தட்டாமல் கிளரி இறக்கிவிவும்.
#.சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கை பொறுக்கும் சூடு வந்தவுடன் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்
#.கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தியோ அல்லது மாவை கிண்ணம் போல செய்து அதில் பூரணத்தை வைத்து எல்லா பகுதியையும் இணைத்துவிடவும்.
# ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வரை வேகவிடவும்
#. கொழுக்கட்டை தயார்.
..............................................
Comments
ஹர்ஷினி எபப்டி இருக்கிறார்,
என்ன பதிவே காணும்,
கொழுக்கட்டை, சுண்டல் அருமை.
எனக்கு ரொம்ப பிடிச்சது மாதம் ஒரு முறை செய்வேன்.
இதை ரைஸ் குக்கரிலா வேகவைத்தீங்க எவ்வள்வு நேரம் வைத்தீங்க/