மிக்சர்

தீபாவளிக்கு எங்க வீட்டு மிக்சர் எல்லாரும் மறக்காம எங்க வீட்டுக்கு வந்துடுங்க... தீபாவளி வாழ்த்துகள்.




தேவையான பொருட்கள்

◦கடலை மாவு – 1 கப்
◦மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க

செய்முறை:-

ஓமப்பொடி தயாரிக்கும் முறை:-

#. கடலை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்(முறுக்கு மாவைப் போல).
#.கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு பிழிந்து விடவும்.

.

#.எண்ணெயில் சிறு சிறு குமிழ்கள் வருவதைப் பார்க்கலாம். குமிழ்கள் வருவது நின்றவுடன் உடனடியாக ஓமப்பொடியை எடுத்து விடவும்




பூந்தி தயாரிக்கும் முறை:-

#.கடலை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு பதம் சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.

#. . எண்ணெய் சூடானதும் பூந்தி தேய்க்கும் கரண்டியில் மேலே ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி தேய்த்து விடவும்.




#.மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

அவல் பொரிக்கும் முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும். பொரிக்கும் கரண்டியின் மேலே அவலை வைத்து எண்ணெயில் பொரிக்கவும். அவல் கரண்டியின் மேலேயே இருக்க வேண்டும். கடாயின் உள்ளே போகக் கூடாது.



அவல் சூடாக இருக்கும் போதே கொஞ்சம் உப்பும், மிளகாய் தூளும் சேர்த்து கலக்கவும்.


வறுக்க வேண்டியவை

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை,



வேர்க்கடலை சேர்த்து வேர்க்கடலை கறுப்பாகும் வறுத்து எடுத்து வைக்கவும்.





ஒரு பாத்திரத்தில் பொரித்து வைத்துள்ள பூந்தி, ஓமப்பொடி, அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, சிறிது உப்பு,மிளகாய் தூள்


எல்லாவற்றையும் ஒன்று சேர கலக்கவும்.


மொறு மொறுப்பான , காரசாரமான மிக்சர் ரெடி.

Comments

சூப்பர்!

தீபாவளி வாழ்த்து(க்)கள்.

கடலையைக் கறுக்க விடாதீங்க.
Jaleela Kamal said…
mm kalakkungka kalakkungk
apapdiyee oru plate ippadi thaLungka.
Jaleela Kamal said…
shaathka akka viiddil oru kaalavai mixer saappiddeen super, avngaklee seythathu.
ஆஹா..கண்ணை கவரும் விதம் அருமையான மிக்சர்.
Angel said…
very nice.
thanks for the tips for frying powa.
wish you a happy diwali.
எனக்கு மிகவும் விருப்பமானது .இந்த மிக்சர் பார்க்க அழகாகவும் இருக்கு . மிகவும் நன்றி உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
Thanks All... Happy Diwali. :-)
Unknown said…
நல்லா இருக்கு...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
vanathy said…
very nice recipe.
Anonymous said…
i tried this... really tasty and easy to prepare.. thx for the recipe...