பொரி உருண்டை

பொரி உருண்டை

அனைவருக்கும் கார்திகை திப திருநாள் வாழ்த்துகள்....ஸ்பெசல் பொரி உருண்டையுடன் கொண்டலாம் வாங்க



தேவையான பொருட்கள்:

பொரி - 8 கப்
வெல்லம் பொடி - 2 கப்
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்



செய்முறை:-

@.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி பாகு காய்ச்சவும்.




@.பாகு கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம்.அதிரசத்துக்கும் விட சற்று முற்றிய பதம்.. இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.




@.உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.

@.கையில் உட்டாமல் இருக்க கொஞ்சம் நெய் தடவி கொள்ளவும்.





...........................................

Comments

Eeva said…
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
GEETHA ACHAL said…
சூப்பராக இருக்கு...
suupparoo, suupparngka.
Jaleela Kamal said…
uuril sinna vayathil adikkadi vaangki saapiduveen