செளசெள சட்னி
தினமும் என்ன சட்னி, என்ன சட்னி பன்னலாம் என யோசிப்பவர்கள் இதையும் முயற்ச்சித்து பாருங்கள்...இந்த சட்னி என் தோழி பிரியாவிடம் சுட்டது..என்ன காய் என்ரு கண்டுபிடுக்க முடியாத அளவுக்கு சட்னி அவ்வளவு சுவை...இது கலவை சாதம் ..தோசை என எல்லாவற்றுக்கும் பொருந்தும்...காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் சுவையே சுவைதான்...
தேவையான பொருட்கள்:-
சௌசௌ
கடலை பருப்பு
காய்ந்த மிளகாய்
உளுந்து பருப்பு
சீரகம்
தேங்காய் துருவல்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
*.ஒரு கடாயில் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு உளுந்து, காய்ந்த மிளகாய்,சீரகம் சேர்த்து வதக்கவும்
*.வதங்கியதும் அதில் சின்னதாக வெட்டிய சௌசௌ சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
*.கடைசியாக தேங்காய் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
*.ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்கவும்.
*.தாளிப்பு தேவைபட்டால்..கொஞ்சம் எண்ணெயில் கடுகு ,உ.பருப்பு ,மிளகாய் , கருவேப்பில்லை தாளித்து கொட்டவும்.
................................................
Comments
www.priyasinterest.blogspot.com
/ இன்னுமா சௌ சௌ edible லிஸ்டில் இருக்கிறது?/
ஏன் இப்படி கேட்டீர்கள் என புரியவில்லை?...எந்த காய்கறியையும் நம் உணவு முறைக்கு ஏற்ப சமைப்பது எனக்கு பிடிக்கும்...இங்கு இருக்கும் கடைகளில் இருக்கும் எல்லமே என் சமையலிலும் இருக்கும்.:-)