புதினா சட்னி

புதினா சட்னி


தேவையானப்பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
வெங்காயம் -1/2 (தேவைபட்டால் )
உப்பு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:



@.ஒரு வாணலியில் எண்ணை விட்டு பருப்புகளை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.

@.விருப்பம் இருந்தால் கொஞ்சம் வெங்காயத்தையும் வதக்கவும்...வெங்காயம் சேர்ப்பாதால் சட்னி நிறைய கிடைக்கும்.

@. பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

@பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும் .

@.சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.





...............................................

Comments

Menaga Sathia said…
ஹாய் ஹர்ஷினி அம்மா எப்படி இருக்கீங்க?? ஹர்ஷினி நலமா??நானும் பொண்ணும் நலமாக இருக்கோம்பா..உங்க பதிவுகளைதான் நிறைய மிஸ் செய்கிறேன்.அவ்வப்போழுது பதிவிடுங்கள்...
புதினா சட்னி கலர்புல்லா அருமையாக இருக்கு..
GEETHA ACHAL said…
இட்லிக்கு சூப்பர்ப் காம்பினேஷன்..பகிர்வுக்கு நன்றி..
நல்லா இருக்கு .
Priya ram said…
உங்க புதினா சட்னி பார்க்கவே நல்லா இருக்கு. நாங்க வெங்காயம் போடாமல் பண்ணுவோம். உங்க ப்ளாக் பார்த்து நான் பண்ண ப்ரேஸ்லெட் என்னோட ப்ளாக் ல போட்டு இருக்கேன். முடிந்தால் பாருங்கள்.
athira said…
சூப்பர் புதினா சட்னி. நானும் எப்போதாவது இப்படிச் செய்வதுண்டு.
Mahi said…
சட்னி நல்லா இருக்குங்க! நான் எப்பவுமே வெங்காயம் சேர்த்துத்தான் புதினா சட்னி செய்வேன். :)
தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

http://blogintamil.blogspot.com/