இங்கு இண்டியன் ஸ்டோருக்கு போகும் போது ஒரு ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் என் கண்ணை பறித்தது...நானும் அதையே ஒரு 10 நிமிடம் பார்த்து கொண்டு இருந்தேன்...இதை பார்த்துட்ட என்னவர் வேகமா வந்து அதன் விலையை பார்த்தார் 169$ only -ன்னு இருந்தது....அப்புறம் என்ன அதை பார்த்ததும் அவர் ஒரே ஒட்டமா வெளியே போயிட்டார்..ஆனாலும் எனக்கு அந்த பெயிண்டிங் மனதிலே இருந்தது...சரி நம்ம வேளையை காட்ட வேண்டியது தான்னு அடித்த நாள் எடுத்த அதிரடி பெயிண்டிங் தான் இது..ஆனால் நான் கடையில் பார்த்த மாதிரி என்னால் பன்னமுடியவில்லை அது மெட்டலில் இருந்த்து...நான் ஃபோம் போர்டில் செய்து இருக்கேன் இதற்க்கு ஆனா செலவு 2$ :-)
முதலே ஒரு ஃபோம் போர்டில் வரைந்து கட் பன்னி கலர் கொடுத்தேன்
மீதி இருந்த ஃபோமில் ஒரு மலர் கொடி வரைந்தது.
ஊஞ்சல் கொடிக்கு இடையில் மணிகலை இனைத்தேன்.
இது தாங்க அந்த பெயிண்டிங்...என்னடா கை கையிரை பிடிக்கலைன்னு யோசிக்காதீங்க உயர்ந்த மனிதர் உதவியால் இப்ப சரி பன்னியாச்சு.:-)
................................................
Comments
அன்புடன்,
அம்மு.
!!!!!!!!!!
:))))))))))))))
Looks like you are a sweet mommy!:)
ரொம்ப அருமை
வரைதலுக்கும் எனக்கும் ரொம்பவே தூரம்.