சுரக்காய் கோஃப்தா
சுரக்காயில் கோஃப்தாவா... அய்யோ எப்படி இருக்குமோன்னு நினைக்காதீங்க...நீங்களா சுரக்காய்ன்னு சொல்லும் வரை கண்டு பிடிக்காவே முடியாது..இதை என் பஞ்சாபி தோழியிடம் இருந்து கற்றுக்கொண்டது.
தேவையானவை:-
கோஃப்தாவுக்கு:-
சுரக்காய் -1
மைதா மாவு - 1ஸ்பூன்
கடலைமாவு - 1ஸ்பூன்
அரிசி மாவு - 1ஸ்பூன்
காஃர்ன்பிளவர் (சோளமாவு) 1ஸ்பூன்
உப்பு
மிளகாய் தூள்
பெருங்காயத்தூள்
கிரேவிக்கு:-
வெங்காயம்- 2( அரைத்த விழுது)
தக்காளி விழுது -1/2 கப்
இஞ்சி பூண்டு போஸ்ட் -1ஸ்பூன்
சீரகம்
பிரஸ் கிரீம்
கரம் மசாலா தூள்-1/4 ஸ்பூன்
கரிமசாலா தூள்- 1ஸ்பூன்
மஞ்சள் தூள்
செய்முறை:-
*.சுரக்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
*.அதனுடன் , மைதா மாவு,கடலைமாவு ,அரிசி மாவு ,காஃர்ன்பிளவர் (சோளமாவு) ,உப்பு,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
*.உடனே பொரித்து விடவும் ..இல்லாவிட்டால் நீர் விட்டு விடும்.
*. சிரு சிரு உருண்டைகளாக பிடித்து பொரிக்கவும்.
(நான் எண்ணொயில் பொரிக்காமல் 1 ஸ்பூன் மட்டும் சேர்த்து பொரித்தேன்... எல்லாம் டயட் தான் :-)..)
*. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பொரிந்ததும் , அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
*.வெங்காயம் வதங்கியதும் , மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்
*.பின் அதனுடன் கரிமசாலா தூள்,மரம் மசாலா, தக்காளி விழுது எல்லாம் ஒரு சேர வதக்கவும்.
*.தேவைபட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
*.நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கோஃப்தா உருண்டைகளை போட்டு ஒரு கொதி விடவும்.
*. பின்பு பிரஸ்கிரீம் சேர்த்து உடனே இறக்கி விடவும்.
*.சுரக்காய் கோஃப்தா தயார்.
இதை சப்பாத்தி, நாண்,புல்காவுடன் பரிமாறலாம்.
.................................................
Comments
இரா.சி.பழனியப்பன்,இராஜபாளையம்.