சுரக்காய் கோஃப்தா




சுரக்காய் கோஃப்தா

சுரக்காயில் கோஃப்தாவா... அய்யோ எப்படி இருக்குமோன்னு நினைக்காதீங்க...நீங்களா சுரக்காய்ன்னு சொல்லும் வரை கண்டு பிடிக்காவே முடியாது..இதை என் பஞ்சாபி தோழியிடம் இருந்து கற்றுக்கொண்டது.

தேவையானவை:-

கோஃப்தாவுக்கு:-

சுரக்காய் -1
மைதா மாவு - 1ஸ்பூன்
கடலைமாவு - 1ஸ்பூன்
அரிசி மாவு - 1ஸ்பூன்
காஃர்ன்பிளவர் (சோளமாவு) 1ஸ்பூன்
உப்பு
மிளகாய் தூள்
பெருங்காயத்தூள்


கிரேவிக்கு:-

வெங்காயம்- 2( அரைத்த விழுது)
தக்காளி விழுது -1/2 கப்
இஞ்சி பூண்டு போஸ்ட் -1ஸ்பூன்
சீரகம்
பிரஸ் கிரீம்
கரம் மசாலா தூள்-1/4 ஸ்பூன்
கரிமசாலா தூள்- 1ஸ்பூன்
மஞ்சள் தூள்



செய்முறை:-

*.சுரக்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

*.அதனுடன் , மைதா மாவு,கடலைமாவு ,அரிசி மாவு ,காஃர்ன்பிளவர் (சோளமாவு) ,உப்பு,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.

*.உடனே பொரித்து விடவும் ..இல்லாவிட்டால் நீர் விட்டு விடும்.



*. சிரு சிரு உருண்டைகளாக பிடித்து பொரிக்கவும்.
(நான் எண்ணொயில் பொரிக்காமல் 1 ஸ்பூன் மட்டும் சேர்த்து பொரித்தேன்... எல்லாம் டயட் தான் :-)..)



*. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பொரிந்ததும் , அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.



*.வெங்காயம் வதங்கியதும் , மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்



*.பின் அதனுடன் கரிமசாலா தூள்,மரம் மசாலா, தக்காளி விழுது எல்லாம் ஒரு சேர வதக்கவும்.



*.தேவைபட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.



*.நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கோஃப்தா உருண்டைகளை போட்டு ஒரு கொதி விடவும்.




*. பின்பு பிரஸ்கிரீம் சேர்த்து உடனே இறக்கி விடவும்.

*.சுரக்காய் கோஃப்தா தயார்.





இதை சப்பாத்தி, நாண்,புல்காவுடன் பரிமாறலாம்.

.................................................

Comments

Menaga Sathia said…
கோப்தா சூப்பர்ர்ர்ர்!! நீங்களும் டயட்டா? கலக்குங்க...
Palani said…
கோபதா சூப்பர்.தயாரிப்பும் பிரமாதம்.ருசியும் நன்றாக உள்ளது.
இரா.சி.பழனியப்பன்,இராஜபாளையம்.
கோப்தா சூப்பர். நான் தக்காளி மசாலில் செய்திருக்கேன். இது புதுசு.
super நானும் அடிக்கடி செய்வேன். ரொம்ப நன்றாக இருக்கும்.
GEETHA ACHAL said…
சூப்பரான குறிப்பு...அருமை...பார்க்கும் பொழுது அதன் சுவை தெரிகின்றது...அவசியம் செய்து பார்க்கவேண்டிய குறிப்பு...Note செய்தாச்சு...நன்றி....
அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி :-)
photos yellam paathey cook pannitalaam, avloo alaka irukkuppa..;)
Asiya Omar said…
சுரைக்காயில் கோஃப்தா கேள்விபட்டிருக்கிறேன்,இப்பதான் கண்ணால பார்க்கிறேன்.அருமை.
Jaleela Kamal said…
rompa nalla irukku